பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் புதிய ஆண்டுக்கான பாதீட்டு வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் விசேட அமர்வு சபையின் தவிசாளர் ஞானகுணாளன் தலைமையில் சபையின் பிரதான மண்டபத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது 2020ஆம் ஆண்டுக்கான பாதீட்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதுடன் சபை உறுப்பினர்களது ஒத்துழைப்புடன் குறித்த பாதீட்டு வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தப் பாதீட்டில் உறுப்பினர்கள் தங்களது வட்டாரத்திலுள்ள அபிவிருத்தி வேலைகளை செயற்படுத்துவதற்கான நிதி சம அளவில் பங்கிடப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக இவ் உள்ளுராட்சி சபையின் ஆதிக்கத்தில் உள்ள பிரதேசத்தில் மக்களது தேவைகளை நிலை நிறுத்தி எவ்வட்டாரத்திலும் எந்தப் பிரதிநிதியும் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ள முடியும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக இலங்கையில் உள்ள பல உள்ளுராட்சி சபைகளில் சபையினை கொண்டு நடாத்துவதில் ஆளும் தரப்பு எதிர்தரப்பு உறுபின்னர்களிடையே முரண்பாடுகள் காணப்படும் நிலையில் இச் சபையில் இது வரை அத்தகைய எதனையும் எதிர் நோக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.