வவுனியாவில் இடம்பெற்ற வீதிப் போக்குவரத்து பாதுகாப்புக்கூட்டம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் வீதிப் போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான கூட்டம் பொலிஸ் அத்தியட்சகர் காரியலாயத்தில் அமைந்துள்ள சேவை பயிற்சி நிலையத்தில் இன்று இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலாத சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.பி.மல்வலகே, வவுனியா மாவட்டத்திலிலுள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொருப்பதிகாரிகள், போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரிகள், போக்குவரத்து பொலிஸார், அரச திணைக்கள உயர் அதிகாரிகள், வர்த்தக சங்கத்தினர், சுகாதார பிரிவினர், வீதி அதிகார சபையினர், பாடசாலை சமூகத்தினர் மற்றும் முச்சக்கரவண்டி சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, வவுனியாவில் டெங்கின் தாக்கம் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள், கடந்த சில மாதங்களில் வவுனியாவில் முன்னேடுக்கப்பட்ட போக்குவரத்து மாற்றங்கள், வீதி விபத்தினை கட்டுப்படுத்த செயற்படுத்த வேண்டிய நடவடிக்கைகள், பொலிஸாரின் செயற்பாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.