ஜப்பானில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பணம் மோசடி செய்த பெண்

Report Print Steephen Steephen in சமூகம்

ஜப்பானில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்த பெண்ணொருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஜப்பானில் வேலை வாய்ப்பை பெறுவதற்காக இந்த பெண்ணிடம் 6 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும் உறுதியளித்தப்படி வேலை வாய்ப்பை வழங்கிவில்லை எனக் கூறி ஒருவர் விசேட விசாரணைப் பிரிவிடம் முறைப்பாடு செய்திருந்தார். இதனடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், வெலிவேரிய பிரதேசத்தை சேர்ந்த இந்த பெண்ணை கடந்த 21 ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அருகில் வைத்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் அவர் அனுமதிப்பத்திரம் பெறாமல் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றை நடத்தி வருவது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண், கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் டிசம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.