திருகோணமலையில் படகு கவிழ்ந்து ஒருவர் பலி

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மீனவர் ஒருவர் படகு விபத்தில் உயிரிழந்துள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

உப்புவெளி, சாம்பல்தீவு பகுதியில் இருந்து மீன் பிடிப்பதற்காக சென்ற படகொன்று கடல் கொந்தளிப்பு காரணமாக கவிழ்ந்தது.

இதன்போது படகில் பொருத்தப்பட்டிருந்த இயந்திரம் வெட்டியதால் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பில் விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ் விபத்தில் உயிரிழந்தவர் திருகோணமலை சல்லி - சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய அகிலராஜ் என தெரிவிக்கப்படுகின்றது.