எக்னேலிகொட வழக்கில் மூன்று இராணுவ புலனாய்வாளர்கள் விடுதலை

Report Print Steephen Steephen in சமூகம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னேலிகொடவை கடத்திச் சென்று கொலை செய்தமை தொடர்பான வழக்கில் இரண்டாவது சந்தேக நபரான பிரபோத சிறிவர்தன உட்பட மூன்று இராணுவப் புலனாய்வாளர்களை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, ஹோமாகமை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இராணுவப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளான லெப்டினட் கேர்ணல் பிரபோத சிறிவர்தன உட்பட 12 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இன்று நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் ஆஜரான குற்றவியல் புலனாய்வு விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய வழக்கில் இரண்டாவது சந்தேக நபரான இராணுவப் புலனாய்வு பிரிவின் கிழக்கு பிரிவு அணியின் இரண்டாவது கட்டளை அதிகாரியான லெப்டினட் கேர்ணல் பிரபோத சிறிவர்தன, 10ஆவது மற்றும் 12ஆவது சந்தேகநபர்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.

ஏனைய 9 சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பில் மூன்று நீதிபதிகள் அடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் குற்றவியல் புலனாய்வு விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்.