திருகோணமலையில் தமிழ் ஊடகத்துறைக்கான செயலமர்வு

Report Print Rakesh in சமூகம்

திருகோணமலை மாவட்ட இளைஞர், யுவதிகளை உள்வாங்கும் தமிழ் ஊடகத்துறைக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு ஒன்று நடைபெற்றுள்ளது.

திருகோணமலை நகர சபையின் பொது நூலகக் கலந்துரையாடல் மண்டபத்தில் அண்மையில் திருகோணமலை எழுத்தாணி கலைப்பேரவையின் ஏற்பாட்டில் இந்த செயலமர்வு இடம்பெற்றுள்ளது.

இதில் திருகோணமலை மாவட்ட ரீதியாக உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட இடங்களில் இருந்து ஊடகக் கற்கை நெறியை க.பொ.த உயர்தரத்தில் கற்கும் மாணவர்கள், க.பொ.த உயர்தரப் பரீட்சையை எழுதிவிட்டு பெறுபேற்றுக்காகக் காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இமானுவேல் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.