முடங்கியது பேஸ்புக்! பயனர்கள் கடும் அதிருப்தி

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்

சமூக வலைத்தளமான பேஸ்புக் பல நாடுகளில் முடங்கியிருப்பதனால் அதன் பயனர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பராமரிப்பு வேலைகளுக்காக பேஸ்புக் சற்று நேரத்துக்கு முடங்கியிருப்பதாகவும் சிறிது நேரத்தில் வழமைக்குத் திரும்பும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கை, இந்தியா, பிரான்ஸ், அமெரிக்கா, ஐயர்லாந்து, அவுஸ்திரேலியா, தெற்காசியாவில் பல நாடுகள், என்று நிறைய இடங்களில் வேலை செய்யாமல் முடங்கி இருக்கிறது. நீண்ட நேரம் இந்த பிரச்சனை நீடித்து வருவதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக கைத் தொலைபேசிகளில் வழமை போன்று இயங்கும் பேஸ்புக் கணனிகளில் முடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் சிறிது நேரத்தில் இது வழமைக்குத் திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் முன்னணி நிறுவனமான பேஸ்புக் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக முடங்குவது தொடர்பில் பயனர்கள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றார்கள்.