சாதாரண பயணியாக இந்தியா சென்ற கோட்டாபய!

Report Print Vethu Vethu in சமூகம்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா நோக்கி சென்றுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பிற்கமைய அங்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சாதாரண பயணிகள் பயணிக்கும் பகுதியிலேயே தனது பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

அவருக்கு சாதாரண பயணிகள் விமானத்தில் 10 அதிகாரிகளை மாத்திரம் அழைத்து சென்றுள்ளார். அவர்கள் அனைவரும் அரச அதிகாரிகள் என தெரிவிக்கப்படுகின்றது.

எந்தவொரு அரசியல்வாதியையோ அல்லது அவரது உறவினர்களையோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பயணித்தில் இணைத்துக் கொள்ளவில்லை என குறிப்பிடப்படுகின்றது.