இலங்கையின் ஐந்து மாவட்டங்களுக்கு டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரிக்கை

Report Print Sujitha Sri in சமூகம்

இலங்கையின் ஐந்து மாவட்டங்களுக்கு டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் டெங்கு நோயினை ஏற்படுத்தும் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையிலேயே கொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் பரவல் வீதம் அதிகரித்துள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் காரணமாக 90 பேர் உயிரிழந்தனர்.

இதனால் குறித்த மாவட்ட மக்கள் அவதானமாக செயற்படுவதோடு, சுற்றுச்சூழலை தூய்மையாக பேணுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Latest Offers