பூநகரி செல்விபுரம் வீதி வளைவில் நள்ளிரவில் விபத்து: நால்வர் காயம்

Report Print Suman Suman in சமூகம்

பூநகரி செல்விபுரம் வீதி வளைவில் நள்ளிரவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பூநகரி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து, யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேக கட்டுப்பாட்டை இழந்து கப் ரகவாகனம் வீதி ஓரத்தில் இருந்த மரமொன்றுடன் மோதியுள்ளது.

வாகனத்தில் நால்வர் பயணித்துள்ள நிலையில் இருக்கையில் அமர்ந்து பயணித்த சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் படுகாயங்களிற்குள்ளாகியுள்ளனர்.

மரத்துடன் மோதுண்டமையால் வாகனம் பலத்த சேதமடைந்தள்ளது. படுகாயமடைந்த குறித்த இருவரும் பலத்த பிரயத்தனங்களுக்கு மத்தியில் மீட்கப்பட்டுள்ளனர்.

பின்னால் இருந்து பயணித்த இருவரும் சாதாரண காயங்களிற்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்களில் மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றையவர் பூநகரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் கடந்த 23.11.2019 அன்று இரு பார ஊர்திகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி நால்வர் படுகாயமடைந்தமை குறிப்பிடதக்கதாகும்.