கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சிறுமியொருவரின் சடலம் மீட்பு!

Report Print Thirumal Thirumal in சமூகம்

தலவாக்கலை - பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூண்டுலோயா - ஹதூனுவாவ, வட்டாந்தர பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சானிக்கா மதுஷானி ஏக்கநாயக்கவே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி 27.11.2019ஆம் திகதி காலை முதல் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று மதியம் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்ட இச்சடலத்தை மரண விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமி தற்கொலை செய்து கொண்டரா அல்லது கொலை செய்யப்பட்டு நீர் தேக்கத்தில் எறியப்பட்டுள்ளாரா என்பது தொடர்பான புலன் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.