வடக்கிற்கான புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்கு

Report Print Jeslin Jeslin in சமூகம்

கடந்த இரு தினங்களாக பாதிக்கப்பட்டிருந்த வடக்கிற்கான புகையிரத போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது.

நேற்று முன்தினம் யாழ்தேவி புகையிரதம் தடம்புரண்டதன் காரணமாக அப்பகுதிக்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், புகையிரத வீதி புனரமைக்கப்பட்டு இன்று முதல் வடக்கிற்கான புகையிரத சேவை வழமைக்குத் திரும்பியுள்ளது.

இதன்படி இன்று காலை மீண்டும் கொழும்பு, கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான புகையிரத சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.