விடுதலை புலிகளின் தலைவரது புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றிய நபர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படத்தை பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரணை அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக ஹொரணை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஹொரணை முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வைத்து இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடம் இருந்த ஸ்மார்ட் செல்போனையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.