வவுனியாவில் தாய்நாட்டை அழகாக ஆக்குவோம் வேலைத்திட்டம்

Report Print Theesan in சமூகம்

குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றி தாய் நாட்டை அழகாக ஆக்குவோம் எனும் வேலைத்திட்டம் வவுனியாவில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், வவுனியா ஈச்சங்குளம் பிராந்திய பொலிஸாரும், புதுக்குளம் பொதுமக்களும் இணைந்து வீதியோரத்தை தூய்மைப்படுத்தியிருந்தனர்.

குறித்த வேலைத்திட்டமானது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் கருத்திட்டத்தின் கீழ் பொலிஸாரின் துணையுடன் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.