ஜூட் ஷர்மாந்த வெளிநாடு செல்ல தடை

Report Print Steephen Steephen in சமூகம்

றோயல் பார்க் கொலை சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை பெற்ற ஜூட் ஷர்மாந்த அன்டனி ஜெயமஹா வெளிநாடு செல்ல தற்காலிக தடைவிதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜூட் அன்டனி ஜெயமஹாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு இன்று முதல் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.

இலங்கையில் வசித்து வந்த சுவீடன் நாட்டைச் சேர்ந்த Yvonne Jonsson என்ற 19 வயதான யுவதி கடந்த 2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.

கொழும்பு இராஜகிரிய பிரதேசத்தில் உள்ள றோயல் பார்க் தொடர்மாடி வீடமைப்பு தொகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வைத்து ஜூட் ஷர்மாந்த அன்டனி ஜெயமஹா அந்த யுவதியை தாக்கி கொலை செய்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கில் ஜூட் ஷர்மாந்த அன்டனி ஜெயமஹாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார்.