மன்னாரில் உணவு தன்னாதிக்கத்தை பாதுகாப்பது தொடர்பில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு

Report Print Ashik in சமூகம்

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் உணவு தன்னாதிக்கத்தை பாதுகாப்பது தொடர்பில் இளைஞர்களுக்கு தெளிவுப்படுத்தும் விழிப்புணர்வு செயலமர்வொன்று நடைபெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று இந்த செயலமர்வு இடம்பெற்றுள்ளது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஏ.பெனடிற் குரூஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழிர்ப்புணர்வு செயலமர்வில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் செயற்பாட்டாளர் மேரி பிரியங்கா கலந்து கொண்டதோடு, உணவு தன்னாதிக்கத்தை பாதுகாப்பது தொடர்பில் விரிவுரைகளை விவசாய வளவாளர் பிரின்டன் ஜோட் நிகழ்த்தியுள்ளார்.

இலங்கையில் நச்சுப்பதார்த்தங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றமையினால் உணவுப்பொருட்கள் நஞ்சுத் தண்மையினை அடைந்து வருகின்றது.

இந்த நிலையில் நச்சுத் தண்மையினை தவிர்க்கும் வகையில் உணவு தன்னாதிக்கத்தை பாதுகாப்பது தொடர்பாகவும், நச்சுத் தன்மை இன்றி இயற்கையான முறையில் விவசாயம் மற்றும் தோட்டச்செய்கைகளை கையாளும் முறை தொடர்பாகவும், நோய் ஏற்படும் சந்தர்ப்பத்தை தவிர்த்துக் கொள்ளும் வழி முறைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

குறித்த விழிர்ப்புணர்வு செயலமர்வு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அணுசரனையுடன் இயங்கும் இளைஞர் அணியினர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.