சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்

Report Print Sujitha Sri in சமூகம்

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பிரதமரின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில்,

சர்வதேச நாணய நிதியத்திற்கும், இலங்கைக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக மீள்மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

பொருளாதார மேம்பாட்டை இலக்காக கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இது குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் கூறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.