9 மாதங்களில் 44 எயிட்ஸ் நோயாளிகள் மரணம்

Report Print Steephen Steephen in சமூகம்

2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான ஒன்பது மாத காலத்தில் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான 315 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய எயிட்ஸ் தடுப்பு பிரிவின் புதிய புள்ளிவிபரங்களை தெரிவிக்கின்றன.

இவர்களில் 44 பேருக்கு எயிட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஒன்பது மாதங்களில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

2018ஆம் ஆண்டு எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான 350 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 47 பேருக்கு எயிட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. 2018ஆம் ஆண்டு 36 எயிட்ஸ் நோயாளிகள் உயிரிழந்தனர்.

2018 மற்றும் 2019ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களை ஆராயும் போது எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஓரளவு அதிகரிப்பை காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் எயிட்ஸ் நோய் இருப்பது அடையாளம் காணப்பட்ட தினத்தில் இருந்து இதுவரை 504 பேர் அந்த நோய் காரணமாக மரணித்துள்ளனர். 15 பேர் அறியாமல் எயிட்ஸ் நோய் உள்ளாகி மரணித்துள்ளனர். இலங்கையில் இதுவரை எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான 3 ஆயிரத்து 507 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 142 பேருக்கு எச்.ஐ.வி. தொற்றியுள்ளது. 2018ஆம் ஆண்டு 11 இலட்சத்து 84 ஆயிரத்து 916 பேர் எச்.ஐ.வி. வைரஸ் சம்பந்தமாக இரத்த பரிசோதனைகளை செய்துக்கொண்டுள்ளதாக தேசிய எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.