நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு

Report Print TGTE Canada Media in சமூகம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு சுவிசர்லாந்து நாட்டில் நடைபெற்றுள்ளது.

நவம்பர் 23, 30 மற்றும் டிசெம்பர் 01ஆம் திகதிகளில் மூன்று நாளாக இந்த அமர்வு இடம்பெறுகின்றது.

தமிழீழத்தை வென்றடைவதற்கான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளி விவகாரக் கொள்கை, இந்திய பெருங்கடல் இந்தோ- பசுபிக் புவிசார் அரசியலும் தமிழர்களுக்கான வாய்ப்புக்களும், தமிழீழத் தேசக் கட்டுமானம், தமிழர் தலைவதி தமிழர் கையில், பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் ஆகிய தொனிப்பொருட்களை மையப்படுத்தி இந்த அமர்வு முன்னெடுக்கப்படுகின்றது.

இதேவேளை அமைச்சுக்களின் செயற்பாட்டு அறிக்கை, கருத்தாடல், தீர்மானங்கள் ஆகியவை உட்பட பல விடயங்கள் மூன்று நாள் அமர்வுகளில் உரையாடப்பட உள்ளன.

இந்த அமர்வில், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, பிரான்சு, ஜேர்மனி, பிரித்தானியா உட்பட தமிழ்நாட்டில் இருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைப் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.