மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிலுள்ள கோரகல்லிமடுவில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

முருகன் கோயில் வீதி கோரகல்லிமடு கிரானைச் சேர்ந்த பி.பாலசுப்பிரமணியம் வயது (45) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை இரவு கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.