ஊடகவியலாளர்களின் உரிமை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது! சுதந்திர ஊடக அமைப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் சில தீர்மானங்கள் சம்பந்தமான அறிந்து கொள்ள ஊடகவியலாளர்களுக்கு இருக்கும் உரிமை இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாக சுதந்திர ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு மூடப்பட்டமை அதற்கு மாற்று வழியை அறிமுகப்படுத்தாமை என்பது கவலைக்குரிய விடயம் எனவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

த லீடர் இணையத்தளத்தின் தனுஷ்க சஞ்ஜய மற்றும் வோஸ் டியூப் இணையத்தளத்தின் செய்தி தொகுப்பாளர் துஷாரா விதாரண ஆகிய ஊடகவியலாளர்கள் விசாரணைகளுக்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டமை சம்பந்தமான தகவல்களை ஊடகவியலாளர்கள் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

விபரமான தகவல்களை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை அரசாங்கம் இல்லாமல் செய்துள்ளது எனவும் சுதந்திர ஊடக அமைப்பு குறிப்பிட்டுள்ளது.