முல்லைத்தீவில் சகல பாடசாலைகளிலும் இருந்தும் இராணுவத்தினர் வெளியேற்றம்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவில் சகல பாடசாலைகளிலும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் இன்று அப்பகுதிகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் இடம்பெற்ற குண்டு தாக்குதலை தொடர்ந்து முல்லைத்தீவில் சகல அரச பாடசாலைகளுக்கும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், இன்று மூன்றாம் தவணை விடுமுறைக்காக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள காரணத்தினால் இராணுவத்தினர் தற்காலிகமாக பாடசாலை வளாகங்களில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மேலும் க.பொ.த சாதாரண தர பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள நிலையில் குறித்த காலப்பகுதிகளில் இராணுவத்தினர் மீண்டும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2020ஆம் வருடம் ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.