கொழும்பிலிருந்து சென்ற ரயில் மோதி ஒருவர் பலி! திருமலையில் சம்பவம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலில் வயோதிபர் ஒருவர் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம், இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த வயோதிபர் தனிமையாக வாழ்ந்து வருவதாகவும், தெரியவந்துள்ளது.

இந்நிலையிலேயே, ரயில் வந்து கொண்டிருந்தபோது மதுபோதையில் இருந்த முதியவர், ரயிலுடன் மோதியதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் முள்ளிப்பொத்தானை 4ம் வாய்க்கால் திஸ்ஸபுர பகுதியில் வசித்து வரும் 72 வயதான தர்மதாஷ என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.