மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய திருவிழாவிற்கான கொடியேற்றம்!

Report Print Ashik in சமூகம்

வரலாற்று சிறப்பு மிக்க பழைமை வாய்ந்த கிராமங்களில் ஒன்றான மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய திருவிழாவிற்கான கொடியேற்றம் வெகு விமர்சையாக இன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றது.

இதன் போது புனித வெற்றி நாயகி அன்னையின் கொடி மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையின் கொடி வான் உயர ஏற்றப்பட்டது.

அன்னையின் திருவிழா, புனித வெற்றி நாயகி ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை தேவராஜா கொடுதோர் மற்றும் உதவி பங்குத்தந்தை ரஞ்சன் சேவியர் அடிகளார் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்றது.

ஒன்பது நாட்கள் நவநாள் திருப்பலி, இந்தியா கும்பகோணம் மறை மாவட்டம் மறை உரைஞர் அருட்தந்தை அடைக்கலசாமி அடிகளார் முன்னெடுக்க உள்ளதுடன் குருக்கள் அருட் கன்னியர்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் குறித்த நாட்களில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இலங்கை கத்தோலிக்க வரலாற்றில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த பெரிய ஆலயங்களில் ஒன்றாகவும் வரலாற்று சிறப்பு மிக்க இயேசுவின் திருப்பாடுகளின் காட்சி குறித்த கிராமத்திலே பொம்மைகளைக் கொண்டு உடக்கு பாஸ் என்றழைக்கப்படும் காட்சிகள் இலங்கையில் பேசாலையில் மட்டுமே முன்னெடுக்கப்பட்டு வருவது சிறப்புமிக்க தொன்றாகும்.

குறித்த கிராமத்தில் ஆண்டு திருவிழா எதிர்வரும் எட்டாம் திகதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளமை குறிப்பிடதக்கது .