விடுதலைப் புலிகள் மறைத்து வைத்ததாக கூறப்படும் பற்றரிகள் பல மீட்பு!

Report Print Murali Murali in சமூகம்

விடுதலை புலிகளினால் புதைத்து வைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 130 பற்றரிகள் மீட்கப்பட்டதாகத் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

திருகோணமலை தலைமையக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் குறித்த பற்றரிகள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை அலஸ்தோட்டப்பகுதியில் நிலத்தில் கொங்ரீட் போட்டு மறைத்து வைத்திருந்த நிலையில், குறித்த பற்றரிகள் தம்மால் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட பற்றரிகளில் சிறியவை 40ம் பெரியவையாக 90ம் காணப்பட்டதாகத் தெரிவித்தனர் . குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.