கந்தளாயில் அடை மழை: மின்சாரம் துண்டிப்பு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கந்தளாய் பகுதியில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கூடிய அடை மழை பெய்துள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் அதிக வலு உடைய மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. இதனால் பேராறு பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.

அப்பகுதி மக்கள் இது தொடர்பில் கந்தளாய் மின் பாவனைகள் அலுவலகத்திற்கு அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

அந்தவகையில், கந்தளாய் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்தும் அடை மழை பெய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.