சஹ்ரான் குழுவால் படுகொலை செய்யப்பட்ட பொலிஸாரின் நினைவாக குருதிக்கொடை

Report Print Varunan in சமூகம்

பயங்கரவாத குழுவினரால் படுகொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் நினைவாக இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் வைத்து சஹ்ரான் குழுவினரால் படுகொலை செய்யப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களான கணேஸ் தினேஸ், இந்திஹ பிரசன்ன ஆகியோரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காவேரி விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் பெரியநீலாவணை இளைஞர்களால் இரத்ததான நிகழ்வு , பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்தில் இடம்பெற்று வருகிறது.

குறித்த இரத்ததான முகாமில் பெருமளவிலானோர் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.