கிளிநொச்சியில் யாழ்.பல்கலைக்கழக மாணவன் பரிதாப மரணம்

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி - சிவநகர், உருத்திரபுரம் பகுதியில் அரசி ஆலை ஒன்றில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அரசி ஆலையில் உள்ள பகுதி ஒன்றில் காணப்பட்ட வெள்ள நீரை மோட்டார் மூலம் இறைத்து வெளியேற்ற முற்பட்டபோது மின்சாரம் தாக்கியதில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் யாழ்.பல்கலைக்கழக மாணவனான 22 வயதுடைய விக்னராசா சாரங்கன் எனத் தெரியவருகின்றது.

இவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.