இளைஞரை தாக்கிய தங்காலை நகர சபையின் உப தலைவர்

Report Print Steephen Steephen in சமூகம்

தங்காலை நகர சபையின் உப தலைவர் மொஹமட் ஷிராஸ் உட்பட மூன்று பேர் தாக்கியதாக கூறி இளைஞர் ஒருவர் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்காலை முஸ்லிம் வீதியை சேர்ந்த ஷைமில் அமீத் என்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளரே இவ்வாறு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நகர சபையின் உப தலைவர், அவரது சகோதரர் ஆகியோர் மற்றுமொரு நபருடன் இணைந்து தங்காலை வைத்தியசாலைக்கு அருகில் வைத்து நேற்றிரவு 7.30 அளவில் குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சந்தேக நபர்கள் தன்னை தாக்கி, அச்சுறுத்தியதாக இளைஞர், பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் தங்காலை நகர சபையின் உப தலைவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.