மட்டக்களப்பில் 24 கைக்குண்டுகள் மீட்கப்பட்டு வெடிக்க வைப்பு

Report Print Banu in சமூகம்

மட்டக்களப்பு,காஞ்சிரம்குடா, வேக்கந்தசேனை பகுதியில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் வெடிக்கச் செய்து அழித்துள்ளனர்.

இன்று காலை கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வயல் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட குறித்த 24 கைக்குண்டுகளையும் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு பிரிவினர் வெடிக்க வைத்து அழித்துள்ளனர்.

கொக்கட்டிச்சோலை- வேக்கந்தசேனை வயல் பகுதிக்கு அருகில் மண்மேடு ஒன்றில் மண் அகழப்பட்ட நிலையில் கைக் குண்டுகள் இருப்பதாக பொலிஸர் அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து இந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின்படி உடனடியாக வெடிக்கச் செய்யப்பட்டுள்ளன.

குறித்த பகுதி விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சமயத்தில் இக் கைகுண்டுகள் புதைத்து வைத்திருக்கப்பட்டிருக்கலாம் எனவும், தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக குறித்த மண்மேடு மண் அரிப்புக்கு உள்ளாகி இந்த குண்டுகள் வெளியே தென்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.