வலையில் சிக்கிய இராட்சத சுறா! மட்டக்களப்பு மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மீனவர்களின் வலையில் இன்று பகல் இராட்சத சுறா மீன் ஒன்று சிக்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு, பாலமீன் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வலையில் இந்த சுறா சிக்கியுள்ளது.

சுமார் 400 கிலோவுக்கு மேல் எடைகொண்டதாக இந்த இராட்சத சுறா காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

சீரற்ற காலநிலையிலும் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் நிலையில் இந்த சுறாமீன் பிடிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.