உதவ யாருமின்றி தனியனே வாழும் புற்றுநோயாளி தாய்!

Report Print Kanmani in சமூகம்

யுத்தத்தின் வலிகளை சுமந்து கொண்டு ஆங்காங்கே இன்றும் எமது உறவுகள், என்றாவது ஒரு நாள் தனது வாழ்க்கையிலும் இருள் நீங்குமென எண்ணிக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.

யுத்தம் மௌனிக்கப்பட்ட அன்றைய நாள் தொடக்கம் இன்று வரை ஆறாத வடுக்களுடன் உறவுகளின் ஆதரவினை இழந்து இன்னும் பலர் வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றார்கள்.

அந்த வகையில் யாருமே உதவிக்கு இன்றி ஏதாவது ஒரு சுய தொழிலினை செய்தாவது வாழ்வினை கழித்து விடலாமென தன்னம்பிக்கையோடு பல நோய்களோடு தனது ஆயுளை எண்ணி 9ம் வட்டாரம், மல்லிகைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தாயொருவர் வாழ்ந்து வருகின்றார்.

இவர் தமது துன்பங்களை ஐ.பி.சி தமிழ் நிகழ்வில் பகிர்ந்து கொண்டுள்ளார். இவருக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் +94212030600 மற்றும் +94767776363 என்ற இலக்கத்திற்கு தொடர்பினை மேற்கொள்ளலாம்.