கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும், காரும் மோதி விபத்து: ஐவர் படுகாயம்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கந்தளாய் பிரதேசத்தில், கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றும், காரும் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன.

குறித்த சம்பவம் இன்று காலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், இதில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

காரில் பயணித்த இருவரும், பேருந்தில் சென்ற மூன்று பேருமே இவ்வாறு பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக வேகமும், சாரதிகளின் அசமந்தப்போக்கும் நித்திரை கலக்கமுமே விபத்துக்கு காரணமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.