பதுளையில் மண்மேடு சரிவு! விடுக்கப்பட்டுள்ள அபாயகர எச்சரிக்கை

Report Print Varun in சமூகம்

பதுளை - பஸ்ஸரை வீதியில் மண்மேடு சரிந்ததில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என பதுளை மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்தார்.

அதன் காரணமாக பதுளை - பஸ்ஸரை வீதியை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் அந்த பிரதேசத்தில் மண்மேடுகள் மற்றும் கற்பாறைகள் சரியும் அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இந்த வீதியின் ஊடாக போக்குவரத்து பணிகளை மேற்கொள்வது அபாயகரமானது என்பதால் தாம் வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

குறிப்பாக இந்த வீதியில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவை சிறந்த தரத்தில் மேற்கொள்ளப்படாதமையே இவ்வாறு மண்மேடுகள் சரிவதற்கான கரணம் என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்தனர்.

இதேவேளை நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் இவ்வாறு மண்மேடுகள் சரியும் அபாயம் காணப்படுவதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.