தாய் நாட்டை அழகாக மாற்றுவோம் வேலைத்திட்டம் புளியங்குளத்திலும் முன்னெடுப்பு

Report Print Theesan in சமூகம்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் கருத்திட்டத்தின் கீழ் தாய் நாட்டை அழகாக மாற்றுவோம் என்ற வேலைத்திட்டம் இன்று புளியங்குளம் பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றி தாய் நாட்டை அழகாக மாற்றுவோம் என்ற குறித்த வேலைத்திட்டமானது பொலிஸாரின் துணையுடன் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் புளியங்குளம் பொலிஸாராலும் குறித்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது வீதியோரங்களில் தேங்கியிருக்கும் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதுடன், நீர்தேங்கும் இடங்களும் அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.