க.பொ. சாதாரணதர மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துள்ள பரீட்சைகள் திணைக்களம்

Report Print Banu in சமூகம்

க.பொ. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மழை காரணமாக உரிய பரீட்சை நிலையத்திற்கு செல்ல முடியாத சந்தர்ப்பத்தில் அருகில் உள்ள பரீட்சை நிலையத்தில் தமது பரீட்சைகளுக்கு தோற்ற முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற கால நிலை காரணமாக பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள க.பொ. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள பல மாணவர்கள் இவ் அனர்த்தங்களின் பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் அதிகளவில் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே பரீட்சைகள் திணைக்களம், காலநிலை காரணமாக உரிய பரீட்சை நிலையத்திற்கு செல்லமுடியாத மாணவர்கள் தமக்கு அருகில் உள்ள ஏதேனுமொரு பரீட்சை நிலையத்தில் உரிய அனுமதிபத்திரம் மற்றும் அடையாளங்களை உறுதிப்படுத்தி பரீட்சைக்கு தோற்றமுடியும் என்ற அறிவித்தலை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது.

இதன் காரணமாக எந்தவொரு மாணவரும் காலநிலையால் பாதிப்படையாமல் பரீட்சைகளை செய்யமுடியுமென எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.