கண்டி - மஹியங்கனை வீதியிலும் கற்பாறைகள் சரிவு

Report Print Varun in சமூகம்

கண்டி - மஹியங்கனை வீதியில் தெல்தெனிய வேகல என்ற பகுதியில் மண்மேடு மற்றும் கற்பாறைகள் சரிந்துள்ள நிலையில் வீதி மூடப்பட்டுள்ளது.

தொடர்ந்து அப்பகுதியில் பெய்துவரும் அடை மழை காரணமாக மேலும் மண்மேடுகள் மற்றும் கற்பாறைகள் சரிந்து வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரிந்து வந்த மண்மேடு மற்றும் கற்பாறைகளை அகற்றும் பணிகள் பாரிய சிரமங்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்படுவதாக மெததும்பர - தெல்தெனிய பிரதேச செயலாளர் ஏ.எம்.விக்ரமஆராச்சி எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

பொலிசாரின் உதவியுடன் மண்மேடு மற்றும் கற்பாறைகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.