சீரற்ற காலநிலை தொடர்பாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கலந்துரையாடல்

Report Print Thirumal Thirumal in சமூகம்

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பிலால் விசேட கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் இயற்கை அனர்த்த பாதிப்புக்களுக்கு உள்ளான இடங்களில் மண்மேடுகளை அகற்றல் மற்றும் மீட்பு பணிகளில் துரிதமான நடவடிக்கைகளை முன்னெடுக்க இடர் முகாமைத்துவ நிலையம், மற்றும் முப்படையினருக்கு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, நுவரெலியா மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் உண்டான பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இவ் விசேட கலந்துரையாடலில் , உதவி மாவட்ட செயலாளர் அமில நவரத்ன, பிரிகேடியர் அத்துல ஆரியரத்ன உள்ளிட்ட நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய பணிப்பாளர்கள், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.