ராஜாங்க அமைச்சரின் அதிகாரபூர்வ வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து

Report Print Kamel Kamel in சமூகம்

ராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் அதிகாரபூர்வ வாகனம் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்றைய தினம் கொடகம இருபத்து ஏழாம் கட்டைப் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.