கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன!

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பல பகுதிகள் வெள்ள நீரினால் சூழப்பட்டுள்ளதன் காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இருதயபுரம், கறுவப்பங்கேணி, கூழாவடி, மாமாங்கம்,புன்னைச்சோலை உள்ளிட்ட பல பகுதிகளிலேயே வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

குறித்த பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகரசபை முன்னெடுத்து வருகின்றது.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவனின் ஆலோசனைக்கு அமைவாக மாநகரசபை உறுப்பினர்கள்,மாநகர ஆணையாளர் ஆகியோர் நேரடியாக பகுதிகளுக்கு சென்று வெள்ள நீரை வெளியேற்றும் வகையில் வடிகான்களை துப்புரவு செய்யும் பணிகளையும், வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தாழ் நிலங்களில் தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.