நந்திக்கடல் பெருங்கடலுடன் சங்கமம்! மகிழ்ச்சியில் மீனவர்கள்

Report Print Mohan Mohan in சமூகம்

நந்திக்கடலின் நீர்மட்டம் உயர்வடைந்து தற்பொழுது பெருங்கடலுடன் சங்கமித்துள்ளது.

முல்லைத்தீவில் கடந்த மாதங்களில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக நந்தி கடல் நீர் வற்றி காணப்பட்டது.

இதனால் இந்த நந்திக்கடலையே நம்பியிருந்த 700இற்கு மேற்பட்ட மீனவக்குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்பொழுது முல்லைத்தீவில் தொடரும் கனமழை காரணமாக நந்திக்கடலின் நீர்மட்டம் உயர்வடைந்து பெருங்கடலுடன் சங்கமித்துள்ளது.

இதனால் அப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதுடன், இரவோடு இரவாக அப்பகுதிக்கு சென்று மீன்பிடித்தொழிலையும் மேற்கொண்டு வருகின்றனர்.