நீரில் மூழ்கிய வத்தளையின் பிரதான வீதி

Report Print Vethu Vethu in சமூகம்

வத்தளையின் பிரதான வீதிகளில் ஒன்று நீரில் மூழ்கியமையினால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வத்தளை, ஹேகித்த வீதியின் ஒரு பகுதியில் பிரதான நீர் குழாய் திடீரென வெடித்தமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 6.30 மணியளவில் இந்த நீர் குழாய் வெடித்ததாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக வாகன போக்குவரத்திற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

260 இலக்க பேருந்து பயணிக்கும் வீதியே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது.

Latest Offers