திருகோணமலையில் பரீட்சை நிலையங்களுக்குள் புகை விசுறும் நடவடிக்கை

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை மாவட்டத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இடம்பெறும் பரீட்சை நிலையங்களில் காலை நேரத்தில் புகை விசிறும் நடவடிக்கைகளில் திருகோணமலை சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திருகோணமலையில் அதிகரித்துள்ள டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்குடனும் பரீட்சைக்கும் தோற்றும் மாணவர்களை நுளம்புகளிடமிருந்து பாதுகாப்பதற்காகவும் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வி.பிரேமானந்தின் ஆலோசனையின் பேரில் பரீட்சை நிலையங்கள் அனைத்திற்கும் இன்று காலையிலேயே புகை விசுறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக கிராமப் புறங்களில் உள்ள பாடசாலைகள், நீர் நிலைகளுக்கு அருகாமையிலுள்ள பாடசாலைகள் மற்றும் அரச திணைக்களங்களில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.