முல்லைத்தீவு - ஒதியமலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டம் ஒதியமலை கிராமத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

ஓதியமலை வாசிகசாலையில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபி முன்பாக இன்று இந்நினைவு தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபிக்கு தீபம் ஏற்றியும், மலர்மாலையும் அணிவிக்கப்பட்டது.

1984.12.02ஆம் ஆண்டு அதிகாலையில் இராணுவ சீருடையில் கிராமத்திற்குள் புகுந்த ஆயுததாரிகள் ஒதியமலை கிராமத்திலுள்ள வீடுகளில் இருந்த ஆண்களை இந்த வாசிகசாலைக்கு வருமாறு அழைத்து அவர்களை கூட்டிச் சென்று சுட்டு படுகொலை செய்ததாக பாதிக்கப்பட்ட உறவினர்கள் தெரிவித்துள்ளனர்

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், க.சிவனேசன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை தவிசாளர், வவுனியா வடக்கு பிரதேச சபைத் தலைவர் தணிகாசலம், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.