செட்டிகுளத்தில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

Report Print Theesan in சமூகம்

வவுனியா - செட்டிகுளம் பகுதியில் வைத்து கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 52 பேரின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

செட்டிகுளம் விளையாட்டு மைதானத்தில் வைத்து இன்று காலை இந் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பொதுசுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மதகுருமார்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இனிவரும் காலங்களில் குறித்த நினைவு நாளினை செட்டிக்குளம் பகுதியில் துக்கதினமாக அனுஷ்டிப்பதுடன் நினைவு தூபி ஒன்றினையும் அமைக்கவுள்ளதாக செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளர் ஆ.அந்தோணி தெரிவித்துள்ளார்.

Latest Offers