யாழ்.அச்சுவேலியில் டெங்கு நுளம்புகளை அழிக்கும் வேலைத்திட்டம்

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தி அவற்றை அழிக்கும் வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இந்த வேலைத்திட்டம் நடைபெற்றுவரும் நிலையில் இன்று அச்சுவேலி பகுதியில் இப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது அச்சுவேலி பகுதியில் டெங்கு நுளம்புகள் பரவும் சூழல் இனம்காணப்பட்டு அழிக்கப்பட்டதுடன், நீர்நிலைகள் மற்றும் பொது இடங்கள் பல சுத்தம் செய்யப்பட்டன.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினர் மற்றும் அச்சுவேலிப் பொலிஸார் இணைந்து இந்த சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.