காலிமுகத்திடலில் நடைபெறும் மோசடிகள் குறித்து ஆராய கண்காணிப்பு குழு

Report Print Malar in சமூகம்

கொழும்பு, காலிமுகத்திடலில் நடைபெறும் மோசடிகள் மற்றும் அங்குள்ள குறைப்பாடுகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு 24 மணித்தியாலங்களும் செயற்படும் வகையிலான கண்காணிப்பு குழுவொன்றினை நியமிக்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

அண்மையில் காலிமுக திடலிற்கு கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த அமைச்சர் இந்த அறிவுறுத்தலை அங்கிருந்த இலங்கை துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.

காலிமுகத்திடலின் முகாமைத்துவ மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு அவசியமான பல தீர்மானங்களையும் இதன்போது அமைச்சர் மேற்கொண்டிருந்தார்.

Latest Offers