டெங்கு நோயை கட்டுபடுத்த கல்முனையில் வீடுகள் தோறும் விசேட சோதனை

Report Print Varunan in சமூகம்

வேகமாக பெருகிவரும் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த கல்முனை நகரில் விசேட சோதனை நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாட்டிற்கு பாரிய அச்சுறுத்தலாக விளங்கும் டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த பலப்பகுதிகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திடங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. குறித்த வேலைத்திட்டம் இன்று கல்முனை - வடக்கு பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் கல்முனை வடக்கு - பாண்டிருப்பு பகுதியில் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து வீடு வீடாக சென்று சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது வீடுகளில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் குறித்து பொது சுகாதார பரிசோதகர் மக்களை தெளிவுபடுத்தியதுடன் நுளம்பு பெருக்கக்கூடிய இடங்களை அளிக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

நாடு பூராகவும் இதுவரையில் 72764 டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதாகவும் டெங்கு தாக்கத்தினால் 78 மரணங்கள் வரையில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சோதனை நடவடிக்கையில் கல்முனை வடக்கு பிராந்திய சுகாதர வைத்திய அதிகாரி, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளின் பணிப்பின் பேரில் பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.தஸ்ரிம் , கல்முனை சுற்று சூழல் பாதுகாப்பு பொலிஸ், கடற்படையினர் இணைந்து ஈடுபட்டிருந்தனர்.