ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேர்மீதான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு எதிராக முல்லைத்தீவு கடற்தொழில் திணைக்களத்தால் தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் ரவிகரன் உள்ளிட்ட ஏழுபேருக்கெதிரான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 09ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்களால் கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்டிருந்த கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது நீண்டநேரம் ஆகியும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காததால் குறித்த எழுவரினாலும் கடற்தொழில் திணைக்கள அலுவலகம் சேதமாக்கப்பட்டது.

அலுவலகம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை உள்ளிட்ட ஏழு பேர் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ச்சியாக கடந்த ஒருவருடத்திற்கு மேலாக குறித்தவழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் நிலையில், இன்றைய தினம் குறித்த வழக்கு முல்லைத்தீவு நீதிமன்ற நீதிவானால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது .