கோர விபத்தில் தாய், இரு மகள்கள் பரிதாபமாக மரணம்

Report Print Vethu Vethu in சமூகம்

அம்பலங்கொட, ஊருவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

அம்பலங்கொட நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று எதிரே வந்த பேருந்தில் மோதியுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் இரண்டு மகள்கள் என தெரியவந்துள்ளது.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்த மூவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.